பயபத்தியுடன் நினைவு கூர்வோம் : பிரதமர் மோடி டுவிட்

* ஆகஸ்ட் 14-ந்தேதி பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி 2021-ம் ஆண்டு அறிவித்தார். பிரிவினை நினைவு தினத்தையொட்டி மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவு கூர்வோம்.இடபெயர்வின் சுமைகளை சுமக்க தள்ளப்பட்டவர்களின் துன்பங்களையும், போராட்டங்களையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அப்படிப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
* உயர்கல்வித்துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 87 கோடியே 76 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், விடுதிகள், ஆராய்ச்சி மையம், கருத்தரங்குக்கூடம் மற்றும் செய்கலைஞர் ஆய்வுக்கூடங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.