யானை மிதித்து கணவன்-மனைவி பலி : அமைச்சர் ரோஜா நேரில் சென்று ஆறுதல்

By 
cit2

சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு வனப்பகுதியொட்டி சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

இன்று காலை வெங்கடேசும், செல்வியும் விவசாய பணியில் ஈடுபட நிலத்திற்கு சென்றனர். அப்போது விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை வந்தது. இதனைக் கண்டவுடன் கணவன், மனைவி கூச்சலிட்டபடி அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அவர்களை விடாமல் துரத்தி சென்று ஒற்றை யானை கணவன், மனைவியை மிதித்து கொன்றது.

இது குறித்து சித்தூர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷ், செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை மிதித்து கணவன், மனைவி இறந்த தகவல் அறிந்து அமைச்சர் ரோஜா சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளதால் அடிக்கடி விவசாய நிலத்திற்கு யானைகள் வந்து நிலங்களை சேதப்படுத்துகிறது. விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Share this story