மெகா தடுப்பூசி முகாம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
 

By 
Mega Vaccine Camp Chief Minister MK Stalin's study

தமிழகத்தில் மொத்தம் இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 97 ஆயிரத்து 140 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

இரவு 7 மணிவரை :

5 கோடி பேர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்ற நிலையை எய்திட, இன்று 3-வது வாரமாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 

இன்றிரவு 7 மணி வரை சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.

அறிவிப்பும் ஆய்வும் :

இன்று தடுப்பூசி முகாம்களில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. 

எனவே, பொதுமக்கள் திங்கட்கிழமை தடுப்பூசி போட தடுப்பூசி முகாம்களுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாமுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தடுப்பூசி போட வந்தவர்களிடம் போதிய வசதிகள் உள்ளதா? என்று கேட்டறிந்தார். அங்கிருந்த சுகாதார ஊழியர்களிடம் இதுவரை எவ்வளவு பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்? என்று விவரம் கேட்டார்.

அதன் பிறகு, அங்கிருந்து வடசென்னைக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள தடுப்பூசி முகாம்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை திருச்சியில் செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு சென்று பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து துவாக்குடி, வல்லம், தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு, பொது மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
*

Share this story