நீட் தேர்வு முடிவு : முதலிடம் பிடித்த மாணவன்-மாணவி..
 

NEED Exam Results Top Favorite Student-Student ..

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர்நீதிமன்ற தடை விதித்தது. 

இதனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 

அனுமதி :

இந்தச் சூழலில், நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. 

இதைத் தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று இரவு நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. 

பிரவீன்-கீதாஞ்சலி :

அனைத்து மாணவர்களின் மின்னஞ்சல்களுக்கு நீட் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தையும், சேலத்தைச் சேர்ந்த மாணவி அர்ஜிதா 705 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அகில இந்திய அளவில் கீதாஞ்சலி 23-வது இடத்தையும், பிரவீன் 30-வது இடத்தையும், அர்ஜிதா 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்கள் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக, ஓராண்டு தொடர்ந்து பயிற்சி பெற்று, இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

Share this story