கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி.. 10-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம் - அதிர்ச்சி சம்பவம்..

By 
liqq

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கும்பலாகச் சென்று சிலர் கள்ளச்சாராயம் அருந்தினார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் கணேசன் மகன் பிரவீன், தர்மன் மகன் சுரேஷ், சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 

இதில் நான்கு பேரில் 2 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்ததால்தான் உயிரிழந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கூறுகையில், கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர். அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை. அவர்கள் கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிபடுத்தவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார், அதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று விளக்கம் அளித்தார். கள்ளச்சாராயமே காரணமென குற்றம்சாட்டப்படும் நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.  அதன்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வாகியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Share this story