பெட்ரோல், டீசல் விலையேற்றம் : கவுன்சில் கூட்டத்தில் இன்று நிரந்தர தீர்வு?

By 
Petrol, Diesel Inflation A Permanent Solution at the Council Meeting Today


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு லக்னோவில் இன்று நேரடியாக நடத்தப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.  

கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நேரடியாக இன்று கூட்டம் நடைபெறுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,  அத்யாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக, விவாதிக்கப்படுகிறது. 

நாடு முழுவதும் பெட்ரோல் விலையேற்றம் தொடர்பாக, பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்து வருவது தொடர்கதையாய் இருக்கிறது.

இந்நிலையில், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
*

Share this story