ப்ளீஸ் நான் செய்தது தப்புதான்.. இறங்கி வந்த கணவர்.! மனம் இறங்காத மனைவி.! - அதிர்ச்சி தகவல்..

By 
suc2

சென்னை, அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ்(28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நந்தினி என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து மனைவி நந்தினி கோயம்பேட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இந்நிலையில், சதீஷ் செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.  இதனால் மனவேதனையில் இருந்த சதீஷ் நேற்று முன்தினம் தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து பதற்றத்துடன் மனைவி மற்றும் குடும்பத்தினர் சதீஷின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. எவ்வளவு தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி அழுது கதறினார். 

இதுதொடர்பாக, அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this story