நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, பிரதமர் மோடி விமர்சனம்..

By 
vimar

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது இன்று விவாதம் தொடங்க இருக்கிறது.

விவாதத்தை எப்படி எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து பிரதமர் மோடி, பாரளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் அவர்களிடம் பேசும்போது

''எதிர்க்கட்சிகள் சமூகநீதி பற்றி பேசுகிறார்கள். ஊழல் அரசியல், வாரிசு அரசியல் போன்றவற்றால் சமூக நீதிக்கு தீங்கு விளைவித்தவர்கள். எதிர்க்கட்சிகள் பரஸ்பர அவநம்பிக்கையால் நிறைந்துள்ளன. அதன் வெளிப்பாடு காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

சிலர் மாநிலங்களவையில் நடைபெறும் வாக்கெடுப்பு 2024-ம் தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக இருக்கும் என்றார்கள். அரையிறுதியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கூறிய எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Share this story