சந்திரயான்-3 அனுப்பிய படத்தை கிண்டல் செய்த பிரகாஷ்ராஜ் : டுவிட்டர்வாசிகளின் கடும்  விமர்சனங்கள்..
 

By 
prj

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா செலுத்தியுள்ளது. இந்த விண்கலம் நாளை மறுதினம் (23-ந்தேதி) நிலவில் தரையிறங்க இருக்கிறது. இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், இந்திய விஞ்ஞானிகளில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும்.

ஆனால், பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் டீ ஆத்துவதுபோல் ஒருபடத்தை வெளியிட்டு, ''விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து எடுத்த முதல் படம்'' என்ற கருத்த பதிவு செய்துள்ளார். இதற்கு டுவிட்டர்வாசிகள் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

''சந்திரயான்-3 ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பெருமை. அரசியல் நோக்கத்தில் அவமரியாதை செய்யக்கூடாது. டிரோல் செய்யும்போது அரசியலுக்கும், நாட்டிற்கும் இடையிலான எல்லையை தெரிந்து கொள்ளுங்கள்'' ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

''ஒருவரை வெறுப்பதற்கும், நாட்டை வெறுப்பதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. உங்களுடைய இந்த கருத்தை பார்ப்பதற்கு கவலையாக உள்ளது'' என மற்றொரு டுவிட்டர்வாசி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், மோடி மற்றும் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மத்திய பெங்களூரூ மக்களவை தொகுதியில், சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

Share this story