சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடிக்கு பெற்ற இடம்..

* சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி விளங்குவதாக மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அந்நிறுவனம் வெளியிட்ட உலகளவில் பிரபலமான சர்வதேச தலைவர்கள் பட்டியலில், 76 சதவீதம் பேரின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் அதிபர் அலைன் பெர்செட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் பைடன் 40 சதவீத ஆதரவுடன்7ஆவது இடத்தில் உள்ளார். இதில் தென் கொரிய அதிபர் யூன் சியோக் யூல் மற்றும் செக் குடியரசு தலைவர் பீட்ர் பாவெல் ஆகியோருக்கு குறைந்த அங்கீகாரமே கிடைத்துள்ளது.
* இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். "யஷோபூமி" என பெயரிடப்பட்டுள்ள இம்மையம் "மைஸ்" எனப்படும் சந்திப்புகள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் ஆகிய நோக்கங்களுக்கான மையமாக 8.9 லட்சம் சதுர மீட்டர் திட்ட மதிப்பீட்டில், 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பில் அமையவுள்ளது.
இதில் அமையவுள்ள மாநாட்டு மையம் 15 மாநாட்டு மையங்களை உள்ளடக்கி மொத்தமாக 73,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். இதில் ஒரு முக்கிய கருத்தரங்க மண்டபமும், கலைநிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய அரங்கமும், 13 சந்திப்பு அறைகளும் என சுமார் 11 ஆயிரம் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் வகையில் அமையவுள்ளது. மைய கருத்தரங்க மண்டபம் சுமார் 6 ஆயிரம் விருந்தினர்கள் ஒன்றாக அமரும் வகையில் உள்ளது.