ரயில் நிலையத்தில், போர்ட்டராக மாறிய ராகுல்..

By 
porter

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி, நாடு தழுவிய பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது பல்வேறு தரப்பு மக்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாற்றினார்.

திடீரென விவசாயிகளுடன் சேர்ந்து டிராக்டர் ஓட்டுதல், டூவீலரை ரிப்பேர் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். அந்த வகையில் இன்று ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையம் சென்றார். அங்கு அவர் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் உரையாடினார்.

பின்னர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் அணியும் சிகப்பு நிற சட்டையை அணிந்து, கையில் சுமையையும் தூக்கினார். இதுகுறித்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் ''மக்களின் தலைவன் ராகுல் காந்தி அவருடைய போர்ட்டர் நண்பர்களை சந்தித்தார்.

சமீபத்தில், ரெயில் நிலைய போர்ட்டர் நண்பர்கள் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இன்று ராகுல் காந்தி அவர்களை சந்தித்தார். அவர்கள் பணி குறித்து கேட்டறிந்தார். பாரத் ஜோடோ பயணம் தொடர்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளது. 

Share this story