அடுத்தடுத்து அரசியல் தலைவர்களை சந்திக்கும் ரஜினி; காரணம் தெரியுமா?

By 
anan1

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.

2018-ம் ஆண்டில் 'காலா', '2.0' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார். இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று துறவிகளை சந்தித்தார்.

தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுபட்டார்.  இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த ரஜினிகாந்த் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்தித்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றுள்ளது.

 

Share this story