வங்கிக்கணக்கில் ரூ.10,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்.! - தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..

By 
10rs

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அரசு சார் ஊழியர்களுக்கு என்று அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில்தான் நேற்று நிதிவசதியற்ற திருக்கோயில்களில் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.10,000/-தொகுப்பூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு: 210 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், ஒரு கால பூஜை திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்புக்காக தலா பத்தாயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஏற்கனவே  காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவு வழங்கப்படும். நிதி வசதியற்ற திருக்கோயில்களில் ஏற்கனவே மிகக் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசை கலைஞர்களுக்கு 10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் மேலும் 50 திருக்கோயில்களில் 100 இசைக்கலைஞர்கள் 10,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மருதூர் திருஅருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லம் 3.75 கோடி மதிப்பீட்டில் அரசு நிதியில் மறுசீரமைக்கப்படும் 19 திருக்கோயில்களில் 19 புதிய ராஜகோபுரங்கள் 32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். 23 திருக்கோயில்களில் 44 கோடி மதிப்பீட்டில் புதியதாக வணிக வளாகங்கள் கட்டப்படும். உள்ளிட்ட 108 அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

Share this story