விமான பணிப்பெண்ணை கொன்ற துப்புரவு தொழிலாளி சிறையில் தற்கொலை..

By 
air1

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த 3-ந்தேதி ரூபால் ஓக்ரே வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்த விக்ரம் அத்வால் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் நடந்த அன்று ரூபால் வீட்டில் தனியாக இருந்தபோது விக்ரம் அத்வால் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது இதனை தடுக்க முயன்ற ரூபாலியை கத்தியால் கழுத்தை அறுத்துக்கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கைதான விக்ரம் அத்வால் மும்பை ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஜெயில் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Share this story