பாஜக தலைவருக்கு ஆபாச வீடியோ அனுப்பி, பணம் கேட்டு மிரட்டல்; யார் அந்த மர்ம பெண்?

By 
cyb

புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் (வயது 53). இவர் லாஸ்பேட்டை பெத்திச்செட்டிப்பேட் புதுத்தெருவில் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களாக புதிய நம்பரில் இருந்து 'ஹலோ ஜி' என தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரோ மெசேஜ் அனுப்பி இருப்பதாக கருதி இதனை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அதனை சாமிநாதன் எடுத்தபோது மறுமுனையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடை ந்த அவர் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்தார்.

அதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியஒரு பெண் சாமிநாதனிடம் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் பணம் கேட்டார். பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை 'யூ-டியூப்'பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய மர்ம பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

புதுவை பா.ஜனதா தலைவரிடம் இளம் பெ ண் ஆபாச வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் செல்போன் எண்களுக்கு, புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்க வேண்டாம். தற்போது ஆன்லைன் மோசடி கும்பல், வீடியோ கால் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆபாச காட்சிகளை வைத்து எதிர் முனையில் இருப்பவர்கள் உரையாடுவது போல காட்சிகளை ஜோடிக்கிறார்கள்.

இதுபோல் யாரும் பாதிக் கப்பட்டால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் எண் 1930-ல் புகார் அளியுங்கள்' எனத் தெரிவித்தனர். 


 

Share this story