பாலியல் ஈர்ப்பால் விபரீதம் : நண்பனை பெண்ணாக மாற்றி, வாலிபர் திருமணம்?

ஆந்திர மாநிலம் கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாக சாப்பிடுவது என இருந்து வந்தனர்.
இந்த நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டனர். இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் தனித்தனியாக பிரிந்து விடுவோம் என எண்ணினர். இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கலாம் என நாகேஸ்வரராவ் ஆசை வார்த்தை கூறினார்.
அதன்படி நண்பர்களில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது நாகேஸ்வர ராவின் நண்பர் பெண்ணாக மாற ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நாகேஸ்வரராவின் நண்பர் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார். பின்னர் நாகேஸ்வரராவிடம் வந்து நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.
அப்போது நாகேஸ்வர ராவ் நீ அழகாக இல்லை அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரராவின் நண்பர் பெண்ணாக மாறினால் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கிருஷ்ண லங்கா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேஸ்வரராவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.