பிரபலங்கள் பலரிடம் நடைபெறும் நூதன மோசடி : பாடகி சின்மயி டுவிட்

By 
chinmayi

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

சின்மயி சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பாடகி சின்மயி குடும்பத்தாரிடம் இருந்து நூதன முறையில் பணமோசடி நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சின்மயி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில், எங்கள் குடும்பத்தாரிடம் போலியான TNEB-பில்-பே ஸ்கேம் நடைபெற்றுள்ளதாகவும் OTP எண் பகிரப்படாமலேயே இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகவும் செல்போனுக்கு வந்த லிங்கை க்ளிக் செய்ததும் வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல்போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபகாலமாக பிரபலங்கள் பலரிடம் இதுபோன்ற நூதன மோசடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

Share this story