மாணவர்களுக்கு திறன்வழி மதிப்பீடு தேர்வு : கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

By 
shl

* தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

மேலும், தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கு முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

* மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த கல்விக் கொள்கையை வடி வமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாநில கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை தயார் செய்து உள்ளது. இந்த குழு குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கான வயதை 5-ஆக நிர்ணயித்துள்ளது. 3 முதல் 5 வயது வரை 'பிளே ஸ்கூலில்' தான் சேர்க்க முடியும்.

1-ம் வகுப் பில் இருந்து தான் எழுத, படிக்க கற்றுக் கொடுக்கும் அடிப்படை கல்வியை தொடங்க வேண்டும். ஏற்க னவே அரசு பள்ளிகளில் 5 வயதில்தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் தனியார் மற்றும் நர்சரி பள்ளிகளில் 3 வயதிலேயே குழந்தைகள் சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அடிப்படையில் வைத்தே 5 வயதில்தான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற பொதுவான விதி உருவாக்கப்பட்டுள்ளது.

 

Share this story