அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு பற்றி சில தகவல்கள்..

By 
ramtemple

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், அடுத்த ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கோவில் கட்டுமான குழுத்தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அயோத்தியில் அவர் நிருபர்களிடம் கூறி இருப்பதாவது:-

மூன்று அடுக்கு கொண்ட ராமர் கோவிலின் தரைத்தள கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தி பண்டிகை அன்று கோவிலில் குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளைத் தொடங்க கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

ஜனவரி 14 முதல் 24-ந் தேதி வரை சிலை பிரதிஷ்டைக்கான 10 நாள் சடங்கு நடைபெறும். அதன் பின்னர், ஜனவரி 24-ந்தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். ஜனவரி 22-ந்தேதி குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படலாம் எனவும், இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை கோவில் அறக்கட்டளை அதிகாரிகள் அழைப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


 

Share this story