சென்னையில் இருந்து, கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

Special buses will run from Chennai

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் உள்ள நிலையில், தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

வருகிற அக்டோபர் 14-ந்தேதி ஆயுதபூஜை (வியாழக்கிழமை) விஜயதசமி (வெள்ளிக்கிழமை) வருவதால் சனி, ஞாயிறு வரை 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளும் வசதி வருகிறது.

இதனால், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேவைக்கேற்ப பஸ்கள் :

மக்களின் தேவைக்கேற்றாற்போல் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது இயக்கப்பட்டுவரும் பஸ்களை விட, கூடுதலாக சிறப்பு பேருந்துகள் டெப்போக்களில் உள்ளன. 

தற்போது, ஆயுதபூஜை பண்டிகை வருவதால் பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்றாற்போல், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள் ளது.

தென் மாவட்டங்கள் :

எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பஸ்களை இயக்கலாம் என பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

இதில், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பஸ்கள், சொகுசு பஸ்களும் இதில் அடங்கும். 

300 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்ய விரும்புபவர்கள், முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்' என போக்குவரத்து வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
*

Share this story