'சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும்' அமித்ஷா அறிவிப்புக்கு, ஸ்டாலின் வரவேற்பு..

By 
capf

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப்படைகளில் ஆட்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது.

நாடு முழுவதும் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சி.ஏ.பி.எப். தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 15 மொழிகளில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசின் முடிவால் காவலர் பணிக்கு தேர்வு எழுத உள்ள லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்றும் அமித்ஷா கூறினார்.

இந்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும். நான் எழுதிய கடிதத்தின் விளைவாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.



 

Share this story