சுப்ரீம் கோர்ட் பெண் வக்கீல் கொலை : கணவன் கைது

By 
sl5

புதுடெல்லி அருகே உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நொய்டா செக்டார்-30ல் உள்ள ஒரு பங்களாவில் நிதின் நாத் சின்கா, ரேணு சின்கா (வயது 61) ஆகியோர் வசித்து வந்தனர்.

ரேணு சின்கா உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இவர்களின் மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். Also Read - 2 நாள் பயணமாக இமாச்சலப் பிரதேசம் செல்கிறார் பிரியங்கா காந்தி இந்நிலையில், நேற்று முன்தினம் ரேணு சின்கா, பங்களாவில் உள்ள குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ரேணு சின்காவின் கணவர் நிதின் நாத் அங்கு இல்லை.

பங்களாவை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக ரேணு சின்காவை அவரது கணவர் கொலை செய்திருப்பதாக ரேணு சின்காவின் சகோதரர் குற்றம்சாட்டினார். அதன் அடிப்படையில் கணவர் நிதின் நாத் சின்காவை போலீசார் தேடினர். அவரது மொபைல் சிக்னலை ஆய்வு செய்தபோது அவரது கடைசி லொகேசன் பங்களாவை காட்டியது.

இதனையடுத்து பங்களா முழுவதும் சோதனையிட்டனர். அப்போது ஸ்டோர் ரூமில் மறைந்திருந்த நிதின் நாத் சின்காவை கைது செய்தனர். அவர் சுமார் 36 மணி நேரம் அந்த அறையில் இருந்துள்ளார். பங்களாவை விற்பனை செய்யவேண்டும் என்று விரும்பிய நிதின் நாத், அதற்காக ஒருவரிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். ஆனால் பங்களாவை விற்பனை செய்வதற்கு ரேணு சின்கா விரும்பவில்லை. இதனால் இருவருக்குமிடையே தொடர்ந்து சண்டை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

Share this story