பாடப்புத்தகங்களில் புதிய அத்தியாயம் இணைப்பு : தமிழக கல்வித்துறை அறிவிப்பு 

By 
govtgirls

ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'சந்திரயான்-3' வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை என்றும், இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் நமது அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பது கூடுதல் பெருமை என்றும் கூறினார்.

'சந்திரயான்-3' திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


 

Share this story