பயங்கரவாதிகள் தாக்குதல் : இராணுவ அதிகாரி மற்றும் மனைவி, மகன் பலி..

Terrorist attack Army officer and wife, son killed ..

மணிப்பூரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி மகன் உள்பட 7 பேர் பலியாகினர்.

மணிப்பூரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  ராணுவ அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகன் மற்றும்  மேலும், 4 வீரர்கள்  கொல்லப்பட்டனர். 

மியான்மர் எல்லைக்கு அருகே உள்ள  சுராசந்த்பூரில், ராணுவ வாகனங்கள் மீது கண்ணிவெடி மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மணிப்பூரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தியது எந்த பயங்கரவாத இயக்கம் என்பது தற்போது வரை தெரியவில்லை. 
*

Share this story