பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு : 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

Terrorist shooting 5 soldiers martyred

பூஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது :

'பிர் பஞ்சால் வரம்பில் உள்ள ரஜோரி செக்டாரில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ஐந்து பேர்  உயிரிழந்தனர். 

மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். 

பின்னர், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்' என கூறினர்.

பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் இன்று அதிகாலை ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர். 

சமீபத்தில் பந்திபோராவில் பொதுமக்கள் கொல்லப்பட்டதில் தொடர்புடையவர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி இம்தியாஸ் அஹ்மத் தார் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்இடி  உடன் தொடர்புடையவர் . 

அவர் ஷாகுண்ட் பந்திபோராவில் சமீபத்தில் நடந்த பொதுமக்கள் படுகொலையில் தொடர்புடையவர் என  காஷ்மீர் ஐஜிபி விஜயகுமாரை மேற்கோள் காட்டி, ஜம்மு காஷ்மீர் காவல்துறை டுவீட் செய்துள்ளது.

Share this story