இந்திய பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரபல பாடகர்; பிரதமர் மோடி சொன்ன பதில்..

By 
mick

தி ரோலிங் ஸ்டோன்ஸ் என்ற பிரிட்டிஷ் ராக் இசைக்குழுவின் முன்னணி பாடகர் மிக் ஜாகர், இந்தியாவில் தீபாவளி மற்றும் காளி பூஜையை கொண்டாடினார். தனது கொல்கத்தா பயணத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்,

அதில் அவர் பண்டிகை காலங்களில் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் “  நன்றி மற்றும் வணக்கம் இந்தியா. அன்றாட வேலையிலிருந்து விலகி; இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் எனது அன்பு” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவு 6.5 லட்சம் பார்வைகளுடன் வைரலானது.

இந்த நிலையில் மிக் ஜாகரின் பதிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்துள்ளார், "நீங்கள் விரும்புவதை எப்போதும் பெற முடியாது", ஆனால் இந்தியா தேடுபவர்களால் நிறைந்த ஒரு நிலம், அனைவருக்கும் ஆறுதலையும் 'திருப்தியையும்' வழங்குகிறது. இங்குள்ள கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு மத்தியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து இந்தியாவுக்கு வாருங்கள்..." என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், நவம்பர் 11 அன்று நடந்த ஐசிசி உலகக் கோப்பை இங்கிலாந்து-பாகிஸ்தான் போட்டியை ஈடன் கார்டனில் மிக் ஜாகர் பார்த்தார். அவர் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், கொல்கத்தாவிற்கும் பயணம் மேற்கொண்டார். இது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு அவரது இரண்டாவது பயணமாகும். அவர் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இந்திய பயணம் தொடர்பான பல படங்களை பகிர்ந்து வந்தார்.  அந்த பதிவில் "தீபாவளி மற்றும் காளி பூஜை வாழ்த்துக்கள். தீபாவளி மற்றும் ஜெய் காளி மா" என்று குறிப்பிட்டிருந்தார்..

மிக் ஜாகர், 'Sympathy for the Devil', 'You Can't Always Get What You Want, and Gimme Shelter' உள்ளிட்ட பிரபலமான ஹிட் பாடல்களுக்கு பெயர் பெற்றவர். 2002 இல் பிரபலமான இசைக்கான சேவைகளுக்காக அவருக்கு நைட்ஹூட் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story