அன்றைய தங்கப்பதக்கம், நேற்றைய இந்தியன் வரிசையில் ஜெயிலர்.. ஜெயித்தாரா? : பிரபலங்களின் கருத்துகள்..

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில். வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் அப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு 'ஜெயிலர்' வெளியாகி உள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். ஜெயிலர் படத்தின் முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஜெயிலர் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா : ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை 4/5 என்று மதிப்பிட்டுள்ளார். "டைகர் முத்துவேல் பாண்டியனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் முழுவதும் கம்பீரமாகவும், வீரமாகவும், இருக்கிறார். ஒரு நல்ல கதைக்களம் மற்றும் அற்புதமான இயக்கத்துடன் நெல்சனின் மறுபிரவேசம்.
அமுதா பாரதி : ஜெயிலர் வின்னர். முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி ஆவரேஜ் ஆகவும் உள்ளது. இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஒன் மேன் ஷோ. இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் புல்லரிக்கும். மோகன்லால் மற்றும் ஷிவ ராஜ்குமார் ரோல்களுக்கு நல்ல வரவேற்பு. அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. நெல்சன் கம்பேக் கொடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் கனகராஜ் : நல்ல காமெடி காட்சிகள், படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது. இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். குறிப்பாக தமன்னா மற்றும் சுனில் வரும் காட்சிகள் போர். இருப்பினும் இரண்டாம் பாதியில் வரும் டைகர் பிளாஷ்பேக் மற்றும் மாஸான கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தை காப்பாற்றி உள்ளன. அனிருத்தின் பிஜிஎம் ஒலிக்க ஷிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஸ்லோ மோஷனில் நடந்து வரும் காட்சிகள் தெறிக்கவிட்டுள்ளன.
கவிஞர் மருது அழகுராஜ் : நண்பர்கள் சூழ மலேசிய திரையரங்கில், ஜெயிலர் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தங்கப்பதக்கம் நேற்றைய இந்தியன் வரிசையில் ஜெயிலர்...முதல் பாதி வெகு சிறப்பு, பிற்பாதி பரவாயில்லை... படம் ஒரு முறை பார்க்கலாம்.