உங்கள் பாட்டி செய்த சித்திரவதை.. ராகுல் காந்தி மறந்துட்டீங்களா.? - உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டம்..

By 
amitt

எமர்ஜென்சியை விதித்து நாட்டு மக்களை தனது பாட்டி சித்திரவதை செய்ததை காங்கிரஸ் இளவரசர் மறந்து விட்டார் என ராகுல் காந்தி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை ஆட்சியில் வைத்திருக்க, நமது அரசியலமைப்பின் உணர்வை காங்கிரஸ் பலமுறை நசுக்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

18வது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர். ஜூன் 25 அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாள் ஆகும்.

எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக காங்கிரசை பாஜக கடுமையாக தாக்கி வருகிறது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை ஆட்சியில் வைத்திருப்பதற்காக நமது அரசியலமைப்பின் உணர்வை காங்கிரஸ் பலமுறை நசுக்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி இந்திய மக்கள் மீது இரக்கமற்ற கொடுமைகளை செய்தார். காங்கிரஸின் இளவரசர் தனது பாட்டி எமர்ஜென்சியை விதித்ததை மறந்துவிட்டார்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக தாக்கியுள்ளார்.

Share this story