3 பேரை கொன்ற காட்டு யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.. 

By 
ele1

தமிழக- ஆந்திர எல்லையான ராமாபுரம் பகுதியில் ஒற்றை காட்டுயானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். தொடர்ந்து வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அதே ஒற்றை காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், 3 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க இரு மாநில வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். யானையை பிடிப்பதற்காக 100க்கும்மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர்.

தொடர்ந்து யானையை வேலூர் அருகே தமிழக- ஆந்திர எல்லையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையை ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் திருப்பதியில் உள்ள வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுசெல்ல உள்ளனர். ஒற்றை காட்டு யானையை பிடித்ததன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
 

Share this story