இது கடவுளின் ஆசீர்வாதம் : ரஜினி நெகிழ்ச்சி  

By 
yogi45

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் புதிய திரைப்படம் ஜெயிலர். வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் ஜெயிலர் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே இமய மலை பயணம் சென்றுவிட்டார்.   இமய மலை பயணத்தை தொடர்ந்து உத்திர பிரேதச மாநிலத்தில் இருக்கும் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,

உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நாளை ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஜெயிலர் படம் பாக்ஸ் ஆஃபீசில் நல்ல வரவேற்பை பெற்று வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், இவை அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதம் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷராஃப், மோகன் லால், சிவராஜ்குமார், வசந்த ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

Share this story