இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது : பிரதமர் மோடி பெருமிதம்

By 
chan7

இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது : பிரதமர் மோடி பெருமிதம்
 

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி நேற்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியதை அடுத்து, இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை பாராட்டி இந்திய பிரதமர் மோடி, "வரலாற்று சிறப்புமிக்க மகத்தான தருணம் இது. இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும் நேரம். இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம். இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது," என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டுவிட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:-

சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் மேற்பரப்பை கைப்பற்றிய 4வது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல். இவ்வாறு அவர் கூறினார்.

 

Share this story