புதிய 3 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும்: அமித்ஷா

By 
amitshah8

ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 75-வது ஐபிஎஸ் தகுதி தேர்வாளர்களின் தேர்ச்சி அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

''பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அதிகரித்து வருகிறது. மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் புதிய மூன்று சட்ட மசோதாக்கள்  விரைவில் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஐபிசி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், சிஆர்பிசி, சாட்சி சட்டம் ஆகிய மூன்றும் நீக்கப்பட்டு புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும். 

நாடாளுமன்றத்தின் நிலைக்குழு கமிட்டி புதிய சட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறது. அவர்கள் விரைவில் புதிய சட்டங்கள் நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை கொண்டு வருவார்கள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இயற்றப்பட்ட சட்டங்களை கைவிட்டு, புதிய நம்பிக்கையுடனும், புதிய சட்டங்களுடனும் இந்தியா புதிய யுகத்தில் நுழைகிறது. 

இந்த 25 வருடங்கள் நமது தீர்மானங்களை வெற்றியடையச் செய்வதற்கும், நாட்டை அனைத்து துறைகளிலும் முதலிடத்தை அடையச் செய்வதற்கும், நாட்டை அதற்குரிய இடத்தில் நிலைநிறுத்துவதற்கும் எடுத்துக் கொள்ளப்படும். இந்த 25 ஆண்டுகளில் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு முதலிடத்தில் இருக்கும். உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக இருக்கும்'' என்றார்.

Share this story