தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

By 
To strengthen the muscles, good asana ..

வடமொழியில் ‘சதுஷ்’ என்பதற்கு ‘நான்கு’ என்றும் ‘பாத’ என்பதற்கு ‘பாதம்’ என்றும் ‘கால்’ என்றும் பொருள். 

இவ்வாசனம் ஆங்கிலத்தில் Four-footed Pose என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை :

விரிப்பில் படுக்கவும். கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும். கணுக்கால், முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும். 

கைகள் நீட்டியிருக்க வேண்டும். கைகளால் கணுக்கால்களைப் பற்றிக் கொள்ளவும். 

மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரையோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். தோள்களை விரிக்கவும். ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும். 

ஆசன நிலையிலிருந்து வெளியேற, இடுப்பைத் தரையில் வைத்து, கணுக்கால்களை விடுவித்து கால்களை நீட்டவும்.

தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் சதுஷ் பாதாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

பலம் :

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து, மார்பு பகுதிகளை விரிக்கிறது. கைகளை நீட்சியடையச் செய்வதுடன் வலுப்படுத்தவும் செய்கிறது. 

தோள்களை நீட்சியடையச் செய்கிறது, அவற்றின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் நலனைப் பாதுகாக்கிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளைப் போக்க உதவுகிறது. 

கால் வலியைப் போக்குகிறது; கால்களைப் பலப்படுத்துகிறது. உடல் அசதியைப் போக்குகிறது.
*

Share this story