178 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் நாளைய சூரிய கிரகணம்; பொதுமக்கள் ஆர்வம்..

By 
solar4

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டுமே விண்ணில் மிகவும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளை சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில்  பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

மேலும் 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் கோடி புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது.  இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றும் ஆனால் அமெரிக்காவின் சில பகுதிகள் மெக்சிகோ ஆகிய நாடுகளில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாடுகளில் உள்ள மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும்.

மேலும் நாசா தனது சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 34 மணி முதல் நள்ளிரவு 2/25 மணி வரை இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

இந்தியாவில் அந்த நேரத்தில் சூரியன் இருக்காது என்பதால் இந்தியாவில் கிரகணத்தை பார்க்க முடியாது.  ஆனால் அதே நேரத்தில் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்புக்குரியது என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Share this story