ஆடை மீது தொட்டு, பாலியல் தொந்தரவு : ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

Touching on clothing, sexual harassment Supreme Court overturns iCourt ruling

மகாராஷ்டிராவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. 

இதை எதிர்த்து, குற்றவாளி தரப்பில்  மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

போக்சோ சட்டம் :

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி, அந்த சட்டப்பிரிவில் குற்றவாளி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தது. 

ஆனால், இந்திய தண்டனைச்சட்டம் 354-ன்கீழ் அவரது தண்டனையை உறுதி செய்தது. 

எனினும், போக்சோ சட்டம் மற்றும் பாலியல் சீண்டல்  தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு பெரும் விவாதப்பொருளானது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து, அட்டர்ஜி ஜெனரல் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நோக்கம் :

இந்த வழக்குகளை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அப்போது, போக்சோ சட்டம் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது. 

உடல் மீது சீண்டினால் மட்டுமே பாலியல் தொந்தரவு இல்லை, பாலியல் வன்கொடுமைக்கு பாலியல் நோக்கம் மட்டும்தான் மூலகாரணம் என நீதிபதிகள் கூறினர். 

சட்டத்தின் நோக்கம், குற்றவாளியை சட்டத்தின் கண்ணிகளில் இருந்து தப்ப அனுமதிப்பதாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
*

Share this story