வந்தே பாரத் ரயில், வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் : பிரதமர் மோடி உரை

By 
metro5

பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியையும் கூட்டாட்சியையும் விரும்புகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு படியாக மாநிலங்களின் வளர்ச்சி இருக்கிறது. கல்வியறிவு, கடின உழைப்பு, அறிவுத்திறன் நிறைந்த பூமியாக கேரளா உள்ளது.

கேரளா வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும். இந்தியாவின் ரெயில் நெட்வொர்க் வேகமாக மாறி வருகிறது. மேலும் அதிவேகத்துடனும் தயாராகி வருகிறது. கேரளாவுக்கு இன்று முதல் வந்தே பாரத் ரெயில் கிடைத்தள்ளது.

கொச்சிக்கு நீர்வழி மெட்ரோ கிடைத்து உள்ளது. பல்வேறு இணைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரெயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும்.

மத்திய அரசின் உலகளாவிய நலத்திட்டங்களால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன் அடைந்துள்ளனர். கொச்சி நீர்வழி மெட்ரோ உள்பட நாட்டின் பெரும்பாலான பொது போக்குவரத்து அமைப்புகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 

Share this story