பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வழிமுறைகள் : தீயணைப்புத்துறை விளக்கம்

Ways to safely explode fireworks Fire Department Description

தீபாவளியையொட்டி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது பற்றி தீயணைப்பு துறை சார்பில் விளக்கம் அளித்து நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இந்த நோட்டீசுகளை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது :

* பெரியவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

* குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் பட்டாசு வெடியுங்கள்.

* பட்டாசை வெடிக்கும்போது, இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்.

* பெரிய வாளியில் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.

* புஸ்வானம் கொளுத்தும்போது, சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொள்ளுங்கள்.

* நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசுகளை தூரத்தில் நின்று வெடிக்க செய்யுங்கள்.

* தீ விபத்து ஏற்பட்டால் உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள். அல்லது கீழே படுத்து உருளுங்கள்.

* தீ புண்ணுக்கு இங்க், எண்ணெய் போன்றவற்றை உடனே போட வேண்டாம். அருகில் உள்ள டாக்டர்களிடம் சென்று காண்பியுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story