தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? : கல்வித்துறை தகவல்

By 
When will schools open in Tamil Nadu  Academic Information

தமிழகத்தில் கொரோனா  தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி கூறியதாவது :

'10,11,12-ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகளைத் திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளோம். 

பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில், ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும். பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

மேலும் 7.5% வந்த பின்னர்தான் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என  ஆளுநர் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு,

'ஆரம்பத்தில் இருந்தே அதனை நியாயப்படுத்தும் விதத்தில் தான் கூறுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதலமைச்சர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். அரசு பள்ளிகளை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். 

இருமொழிக் கொள்கைதான் நமது கொள்கை. அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்' எனவும் கூறினார். 
*

Share this story