தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடைபெறுமா? : கல்வித்துறை பதில்

Will there be a general examination for 10th and 12th classes in Tamil Nadu  Academic Answer

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தாக்கம், பிப்ரவரியில் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. 

இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, கல்வித்துறை சார்ந்த தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : 'தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து, பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி 1,500 பள்ளி கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை அளிக்க, அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும். 

நடப்புக் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். ஜனவரி முதல் வாரத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கி விடும். 

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும்' என்றார்.
*

Share this story