மகளிர் உரிமைத்தொகை : விடுபட்ட பெண்கள் பதிவு செய்ய 3 நாட்கள் முகாம்..

By 
wn1

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பெண்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பப்படிவம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விடுபட்டு போனவர்களுக்கு நாளை (18-ந் தேதி) முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை (20-ந் தேதி) வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பப்படிவத்தை பெற்று முகாம்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை இறுதி செய்து அதன் பின்னர் வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டிய பணி நடைபெற உள்ளது. விண்ணப்பத்தில் கொடுத்த தகவல் உண்மை தானா? உரிமைத்தொகை பெற தகுதி உடையவரா? வேறு ஏதாவது உதவித்தொகை பெறுகின்றனரா? என்பதை அதிகாரிகள் கள ஆய்வு செய்கிறார்கள். இந்த பணி அடுத்த வாரத்தில் தொடங்குகிறது.

சென்னையில் இதுவரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். விடுபட்டவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கிறது. திங்கட்கிழமையுடன் இந்த பணி நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து களப்பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு பணியில் ஈடுபட்டு பயனாளிகளை தேர்வு செய்கின்றார்கள்.


 

Share this story