2-வது டோஸ் தடுப்பூசி தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு கண்டனம்

In connection with the 2nd dose vaccine, the World Health Organization condemned

வளர்ந்த நாடுகளில் கையாளப்படும் கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து, உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்  கூறியதாவது :

 'வருமானம் குறைந்த  நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசி உலகின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்றடைய வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டபின், 
குறைந்தது ஒரு வருடத்திற்கு பின்னர்,  பூஸ்டர் டோஸ்கள் பற்றி வளர்ந்த நாடுகள் முடிவெடுக்கலாம். அதுவரை பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

முக்கியம் அல்ல :

ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும்  இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆரோக்கியமான நபர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப் படுவது தற்போதைக்கு முக்கிய விஷயம் அல்ல.

எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை விட , யாருக்கெல்லாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.' என்றார்.

பிரிட்டிஷ் ஆய்வு :

சமீபத்திய பிரிட்டிஷ் ஆராய்ச்சியின்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவருடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 32-மடங்கு அதிகமாக  உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*

Share this story