2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு : 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்..

By 
ger1

19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது.

இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசின. அதில் பெரும்பகுதி ஜெர்மனி மீது வீசப்பட்டது. இவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன.

போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது. பல தசாப்தங்கள் ஆன பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.

ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கருகே சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

வெளியெறியவர்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது. தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் தற்போது வரை தகவல்கள் இல்லை.
 

Share this story