இன்றைய ராசி பலன் ; 22.ஜூலை.2022 - வெள்ளிக் கிழமை
 

By 
ast15

     நல்ல நேரம் 

காலை   : 9.15 - 10.15
மாலை    : 4.45 - 5.45

ராகு         : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண்   : 3.00 - 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :   
    உத்திரம், ஹஸ்தம்

மேஷம் :
சந்தோஷ நினைவுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
பணியும் பயணமும் நலமாகும். புதிய வாய்ப்புகளும் எட்டும்.

கன்னி :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

துலாம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். நற்செய்தி விரைந்து வரும்.

விருச்சிகம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

தனுசு :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.

மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். ஆறுதல் வார்த்தை மகிழ்வாகும்.

கும்பம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பாராட்டும் பெருமையும் பெறுவர்.
*

Share this story