இன்றைய ராசி பலன்.! (1.1.2022 : சனிக் கிழமை)

By 
Today's zodiac sign.! (1.1.2022 Saturday)

நல்ல நேரம்

காலை    : 7.30 - 8.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 9.00 - 10.30
குளிகன்  : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :                                                           
    பரணி, கார்த்திகை

மேஷம் : பணியும் பயணமும் நலமாகும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

மிதுனம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

கடகம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

சிம்மம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

கன்னி : நன்மையான நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.

துலாம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.

தனுசு : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் : பொறுமை பலன் தரும். எண்ணிய காரியம் துலங்கும்.

மீனம் : பொருளாதார நிலை சீராகும். உற்சாக மனநிலை நிலவும்

Share this story