இன்றைய ராசி பலன்.! (23.12.2021 : வியாழக் கிழமை)

 Today's zodiac sign.! (23.12.2021 Thursday)

நல்ல நேரம்

காலை    : 10.45 - 11.45
மாலை    : 12.00 - 1.00

ராகு         : 1.30 - 3.00
குளிகன்  : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :                                                           
    பூராடம், உத்திராடம்

மேஷம் : பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மிதுனம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

கடகம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

சிம்மம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கன்னி : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

துலாம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் : இனிய நினைவு அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

தனுசு : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மகரம் : செயலில் திறமை வெளிப்படும். பெரியோர் ஆசி கிட்டும்.

கும்பம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

மீனம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

Share this story