விநாயகரை வழிபடும் 21 வகை இலைபூஜையும் பலன்களும்..

vinayaga2

விநாயகரை 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகனை அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. 

வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து எடுத்து கொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு: 

1.முல்லை இலை பலன்:- அறம் வளரும் 2.கரிசலாங்கண்ணி இலை பலன்:- இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3.வில்வம் இலை பலன்:- இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும். 4. அருகம்புல் பலன்:- அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேஷ மானது. 5.இலந்தை இலை பலன்:- கல்வியில் மேன்மையை அடையலாம். 

.ஊமத்தை இலை பலன்:- பெருந்தன்மை கைவரப்பெறும். 7.வன்னி இலை பலன்:- பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும். 9.கண்டங்கத்தரி பலன்:- வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும். 10.அரளி இலை பலன்:- எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும். 

11.எருக்கம் இலை பலன்: -கருவில்உள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12.மருதம் இலை பலன்:- மகப்பேறு கிட்டும். 13.விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணறிவு கைவரப்பெறும். 14.மாதுளை இலை பலன்:- பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15.தேவதாரு இலை பலன்:- எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும். 

16.மருக்கொழுந்து இலை பலன்:- இல்லற சுகம் கிடைக்கப்பெறும். 17. அரசம் இலை பலன்:- உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும். 18. ஜாதிமல்லி இலை பலன்:- சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும். 

20.அகத்தி இலை பலன்:- கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். 21.தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்:- நல்ல கணவன்- மனைவி அமையப்பெறும்.

Share this story