திருவண்ணாமலை கோவிலில் 24-ந்தேதி சித்திரை வசந்த உற்சவ விழா தொடக்கம் : நிகழ்ச்சிகள் விவரம்..

aruna4

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, வருகிற 24-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது. 

அதையொட்டி, அன்று மாலை 4 மணி முதல் மாலை 5.25 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மூகூர்த்தம் நடைபெறும். 

அதைத்தொடர்ந்து, 25-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு சுவாமிக்கு மண்டகபடி, வீதிஉலா நடை பெறும். 

விழாவின் நிறைவாக, மே 4-ந்தேதி காலை 10 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடக்கிறது. மேலும், அன்று நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

Share this story