6-ந்தேதி மகாளய அமாவாசை : பக்தர்களுக்கு அனுமதி் இல்லை
 

6th Mahalaya New Moon Devotees are not allowed

ராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. 

கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) மகாளய அமாவாசை வருகிறது.

இந்த நாளில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாகி, அதனால் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, வருகிற 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபடவும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு செல்லவும், நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்படுகிறது.

கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு, மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Share this story