மாங்கல்ய தோஷத்திற்கு, ஓர் எளிய பரிகாரம்..

By 
marriage3

திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவது ஒருவரின் பிறப்பு ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? என உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள்.

திருமண விஷயத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. சில வகையான தோஷங்கள், சில கிரக சேர்க்கைகள், சில தசா, புத்திகள், கோட்ச்சார நிலை போன்ற பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்பது பலருக்கும் வரும் சந்தேகம். 

தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும்.

 8-ம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுஸ் ஸ்தானம் அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இது திருமணத் தடையை மிகைப்படுத்தும் தோஷ அமைப்பாகும். 

8-ம் இடத்தில் நீச, அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தாலும் 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி. 

வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரையில் வயதான சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்கள் தந்து ஆசி பெற வேண்டும்.

Share this story