பகவதி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது : நிகழ்ச்சிகள் விவரம்..

baha

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று  (திங்கட்கிழமை) தொடங்கியது. விழா நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. 

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5.15 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடந்தது. 

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். 

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடக்கிறது. 

நாளை மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது.

Share this story